கதிரைமலையை தரிசிக்க செல்லும் அடியார்களுக்கு குறைந்த கட்டணத்தில் வாகன வசதி!!
( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்றுப்பிரசித்தி பெற்ற கதிர்காமம் கதிரைமலை முருகனாலயத்தைத் தரிசிக்க மலையேறும் தமிழ் சிங்கள கந்தன் அடியார்களின் தொகை நாளுக்குநாள் அதிகரித்து;ச்செல்கிறது.
கதிர்காமத்திலிருந்து 3கிலோமீற்றர் தொலைவில் ஏழுமலை என அழைக்கப்படும் கதிரைமலை ஆலயத்திற்கு செல்லும் மலையேறும் பாதை கடந்த காலங்களில் வெகு மோசமாக தூர்ந்துபோயிருந்தது.
இம்முறை கணிசமானளவு படிக்கட்டுகள் சீமேந்திட்டு செம்மையாக்கப்பட்டுள்ளன.கதிர்கா மத்திற்குச் செல்லும் பக்தர்கள் கதிரைமலையேறாமல் வருவதில்லை.
மலையடிவாரத்திலிருந்து சுமார் 5000 கி.மீற்றர் உயரத்தில் ஆலயம் அமைந்துள்ளது. அந்தக்காலத்தில் மலைஉச்சியில் வேலுடன் கூடிய முருகனாலயம் அமைந்திருந்ததாகக் கூறுவர்.
இன்று வேலுண்டு.நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் வேலில் நைவேத்தியங்களை (அவல் கடலை பொங்கல்) சாத்தி வழிபட்டு அதனை அங்கு நிற்கும் சகல அடியார்களுக்கும் வழங்கி பகிர்ந்துண்பது வழக்கம்.
அருகில் வெள்ளை நிறத்தில் பாரிய பௌத்த விகாரை உள்ளது. சிவன் ஆலயமும் உள்ளது.அரச மரங்களும் பரவலாகக் காணப்படுகின்றன. எங்குமில்லாத குளிர்காற்று வீசிக்கொண்டேயிருப்பது சிறப்பம்சமாகும்.
கதிரமலை ஏறுகையில் இடையில் யாசகர் கூட்டமும் காணப்படுகின்றது. குரங்குகளின் அட்டகாசம் சொல்லுந்தரமன்று.
மலையேறமுடியாதோருக்கு ஜீப்வசதி செய்துகொடுக்கப்பட்டிருக்கிறது. தலைக்கு ருபா 600 அறவிடப்படுகிறது.
No comments