‘அஸ்வெசும’ இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு ஜூலை நிறைவு!!
‘அஸ்வெசும’ நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பான கணக்கெடுப்பை ஜூலை 31 ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், முதற்கட்டமாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தவறிய குடும்பங்களுக்கு, கடந்த பெப்ரவரி மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு, சுமார் 454,924 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
அந்த விண்ணப்பங்கள் தொடர்பான கணக்கெடுப்பு பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்
No comments