கூலி படத்தில் இணையும் மலையாளத்தின் சென்சேஷனல் நடிகர்.. யார் தெரியுமா
கூலி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கூலிகூலி திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிகை ஸ்ருதி ஹாசன் மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள் என சொல்லப்படுகிறது.
லேட்டஸ்ட் அப்டேட்
இந்த நிலையில், இப்படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் நடிகர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாருமில்லை மலையாள நடிகர் soubin shahir தான்.
மலையாளத்தில் மிகவும் பிரபலமான நடிகரும், தயாரிப்பாளருமான soubin shahir தான் தற்போது ரஜினியின் கூலி திரைப்படத்தில் இணைந்துள்ளார் என கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
மேலும் இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளரான அனிருத் இசையமைக்கிறார். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் டைட்டில் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்து வரவேற்பை பெற்றது.
No comments