Vettri

Breaking News

கல்முனையில் கட்டாக்காலி மாடுகள் நடமாட்டம் அதிகரிப்பு!!




.


செ.துஜியந்தன்

கல்முனை நகரில் கட்டாக்காலி மாடுகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வாகன சாரதிகள், பாதசாரிகள் அசெளகரியங்களுக்குள்ளாகி வருகின்றனர்.  கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சனநெரிசல் மிகுந்த பிரதான வீதிகளில் அங்கும் இங்குமாக கட்டாக்காலி மாடுகள் நடமாடுகின்றன. இதனால் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் பயணிப்போர் திடீரென வீதிக்கு குறுக்கால் பய்ந்து செல்லும் மாடுகளில் மோதுண்டு விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

அத்துடன் பாடசாலை செல்லும் மாணவர்கள் மற்றும் தனியார் வகுப்புகளுக்கு செல்பவர்கள்,  சிறுவர்கள் , முதியோர்கள் இவ் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டத்தினால் பாதிக்கப்படுகின்றனர்.  கல்முனை மாநகர சபை நகரில் அதிகரித்துள்ள கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த  கடும் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

No comments