Vettri

Breaking News

எம்.ஏ.சுமந்திரன் எம்பியின் வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து!!




 பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பயணித்த வாகனம் சனிக்கிழமை (27) மாலை மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பாராளுமன்ற உறுப்பினரின் வாகனம், கிளிநொச்சி 155 கிலோ மீற்றர் தூண் பகுதியில் மோட்டார் சைக்கிளுடன்  மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில், எம்.பி.யின் வாகனத்தின் முன்பகுதி சிறிதளவு சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

No comments