Vettri

Breaking News

இலங்கையின் பொருளாதார விவகாரங்களுக்கு மேலும் ஆதரவளிக்கும் அமெரிக்கா!!




 கடன் மறுசீரமைப்பு நிறைவடைந்த பின்னர் இலங்கையின் பொருளாதார விவகாரங்களுக்கு மேலும் ஆதரவளிக்க தயாராக இருப்பதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை நேற்று நிதியமைச்சில் சந்தித்து கலந்துரையாடிய போதே, திறைசேரியின் ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவிச் செயலாளர் றொபேட் கப்ரோத் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை சரியான திசையில் பயணிப்பதால், ஏனைய நாடுகள் கடன் மறுசீரமைப்பு தொடர்பில், தமது உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, நிதி இராஜாங்க அமைச்சர் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு, அமெரிக்க அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்கு தமது நன்றியை வெளிப்படுத்தியுள்ளார்

No comments