சம்பந்தன் ஐயாவின் மறைவு தமிழ் பேசும் மக்களுக்கு பேரிழப்பாகும் -தௌபீக் எம்.பி தெரிவிப்பு!!
சம்பந்தன் ஐயாவின் மறைவு தமிழ் பேசும் மக்களுக்கு பேரிழப்பாகும்.
இரங்கல் செய்தியில் தௌபீக் எம்.பி
இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்களின் மறைவானது அவரது குடும்பத்திற்கு மட்டுமன்றி எம் அனைவருக்கும் பெருந்துயரினை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மக்களின் உரிமைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் தன்னை முழுமை அற்ப்பணித்தவர் சம்பந்தன் ஐயா என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் அவரது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
எமது நாட்டில் தமிழ் சமூகம் எதிர்நோக்கிய இனரீதியான அதிகார ரீதியிலான பல்வேறு நெருக்கடிக்கடிகளின் போது இராஜதந்திரநீதியாக பல்வேறு நகர்வுகளைமேற்கொண்டு அம்மக்களுக்கு முடியுமான அனைத்து தீர்வுகளையும் பெற்றுக்கொடுத்தவர். தமிழ்-முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒற்றுமையுடன் செயற்பட்டால்தான் சிறுபான்மை மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என நிருபித்துக்காட்டிய தலைவர் சம்பந்தன் ஐயா அவர்கள்.
அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை முஸ்லிம் மக்கள் சார்பாகத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்..!
No comments