Vettri

Breaking News

இன்றைய வானிலை!!




 இன்றையதினம் (23) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் .

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொணராகலை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதேவேளை, செயற்பாட்டில் உள்ள தென்மேற்கு பருவப்பெயர்ச்சிக் காற்று காரணமாக, அரபிக் கடல் பகுதியில் (10N – 20N), (55E – 72E) மற்றும் வங்காள விரிகுடா (13N – 21N), (84E – 92E) வரையிலான கடல் பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 70-80 கி.மீ. வேகத்தில் மிக பலமான காற்று மற்றும் மிகவும் கொந்தளிப்பான கடல் நிலை காணப்படும்.

No comments