கண்ணகி கிராமத்தின் மாதர் சங்க பாலர் பாடசாலையின் பெயர் பலகை திறந்து வைப்பு!!!
அதி கஷ்ட பிரதேசமான அக்கறைப்பற்று கண்ணகி கிராமத்தில் இயங்கி வரும் மாதர் சங்க பாலர் பாடசாலைக்கு தேவையான பெயர் பலகையையும் இரண்டு ஆசிரியர்களுக்கும் சிறு கொடுப்பனவும்.கல்வி கட்கும் (20) மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்களையும் வழங்குமாறு பாடசாலையின் சமுகத்தினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இணைந்த கரங்கள் உறவுகளோடு இணைந்து பயணிக்கும்
திரு,தருஷன்,புவனேஸ்ராஜா அவருடைய நிதி பங்களிப்பில்
மாதர் சங்க பாலர் பாடசாலையின் இரண்டு ஆசிரியர்களுக்கு மாதாந்தம் (Rs:8000)ரூபாவையும்,
(20) மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்களையும்,
பாடசாலைக்கு தேவையான பெயர் பலகையையும் இன்று-24/07/2024 முன்பள்ளி வெளிக்கள உத்தியோகத்தர் பி. மோகனதாஸ், திகோ/கண்ணகி வித்தியாலய அதிபர் த.இராசநாதன், கண்ணகி கிராமம் சமூக சேவையாளர் கோகுலன் அவர்களுடன் இணைந்த கரங்கள் உறுப்பினர்களான
திரு.காந்தன் மற்றும் திரு.சுரேஸ் ஆகியோரினால் திறந்து வைக்கப்பட்டது...
No comments