Vettri

Breaking News

இலங்கையின் விரைவான பொருளாதார மீட்சியை நியூசிலாந்து சபாநாயகர் பாராட்டு!!




 இலங்கையின் விரைவான பொருளாதார மீட்சியை நியூசிலாந்து சபாநாயகர் கெர்ரி போன்லீ (Gerry Brownlee) பாராட்டியதுடன், இலங்கைக்கு  தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாகவும் உறுதி செய்தார்.

நியூசிலாந்து பாராளுமன்றத்தின் சபாநாயகர் (Gerry Brownlee) கெர்ரி போன்லீ  (10) அலரிமாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவை சந்தித்துப் பேசினார் இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

1958 ஆம் ஆண்டு நியூசிலாந்து பிரதமர் வால்டர் நாஷ் மற்றும் அப்போதைய விவசாயம் மற்றும் உணவு அமைச்சர் பிலிப் குணவர்தன ஆகியோர், தேசிய பால் சபையை திறந்து வைத்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நியுஸிலாந்து சபாநாயகர் பார்வையிட்டார்.  இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவைக் குறிப்பிட்ட பிரதமர், நியூசிலாந்து, இலங்கைக்கிடையிலான இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கவும் கொழும்பு திட்டத்தின் கீழ் ஆதரவை அதிகரிக்கவும் அழைப்பு விடுத்தார்.

No comments