அரோகரா கோஷம் விண்ணைப் பிளக்க கதிர்காமம் முருகன் ஆலய ஆடிவேல் விழா மகோற்சவ கொடியேற்றம்!!
( கதிர்காமத்திலிருந்து காரைதீவு வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா மகோற்சவ கொடியேற்றம் நேற்று(6) சனிக்கிழமை மாலை பஸ்நாயக நிலமே திஷான் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கிரிவெஹர விஹாராதிபதி
கோபவக தம்மிந்த நாயக்க, கதிர்காமம் ஸ்ரீ அபிநவரம்திபதி சாஸ்த்ரபதி கபுகம சரணதிஸ்ஸ நஹிமி, பஸ்நாயக்க நிலமே திஷான்,பரிவார ஆலய குரு சிவ ஸ்ரீ தங்கவேல் குருக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
இந் நிகழ்வில் சமய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
சரியாக மாலை 5.28 மணிக்கு அங்குள்ள பள்ளிவாசலில் அரோகரா கோஷம் விண்ணைப் பிளக்க கொடியேற்றம் நடைபெற்றது.
நிகழ்வில் இனமதபேதம் இன்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
கொடியேற்றம் தொடங்கி தொடர்ச்சியாக16 நாட்கள் திருவிழாக்கள் இடம்பெற்று எதிர்வரும் 22ஆம் தேதி மாணிக்க கங்கையில் தீர்த்த உற்சவம் இடம் பெறும்.
No comments