9வளைவு பாலத்தை (Nine Arches Bridge) சூழவுள்ள பிரதேசத்தின் சுற்றுலா முகாமைத்துவ திட்டம் !!!
எல்ல, ஒன்பது வளைவு பாலத்தை (Nine Arches Bridge) சூழவுள்ள பிரதேசத்தின் சுற்றுலா முகாமைத்துவ திட்டம் தொடர்பில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கும் மத்திய கலாசார நிதியத்துக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் நேற்று முன்தினம் (29) பிரதமர் அலுவலகத்தில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானது.
இலங்கையில் முதன்முறையாக தேசிய பாரம்பரிய தளம், தொடர்பில் ஆம்புலன்ஸ் சேவையொன்று இங்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக தெமோதர ரணில் நிலையத்தை அண்மித்த பகுதியில் சுற்றுலா முகாமைத்துவ திட்டம் ஒன்றை ஆரம்பிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
No comments