இரு சொகுசு பஸ்கள் விபத்து – ஒருவர் பலி, 8 பேர் காயம்
குருணாகல் மெல்சிறிபுர பகுதியில் இன்று(17) அதிகாலை அதிசொாகுசு பஸ் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ் சாரதி உயிரிழந்துள்ளதோடு, 8 பேர் காயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதி சொகுசு பஸ் ஒன்றும் கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற அதி சொகுசு பஸ் ஒன்றுமே நேருக்கு நேர் மோதியுள்ளன.
விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments