நீச்சல் தடாகத்தில் மூழ்கி 7வயது சிறுவன் உயிரிழப்பு!!
கண்டி, லூயிஸ் பீரிஸ் மாவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி ஏழு வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். மொஹமட் மிஸ்ஜாத் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவனைக் காப்பாற்றுவதற்காக நீச்சல் தடாகத்தில் குதித்தபோது நீரில் மூழ்கிய அவரது 10 வயதுடைய சகோதரர் கண்டி தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கண்டி தலைமையகப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments