78 வயதுடைய பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 17 வயது மாணவன் கைது!!
பலாங்கொடையில் 78 வயதுடைய பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பலாங்கொடை முகுனமலை பிரதேசத்தை சேர்ந்த எம்.எல். சிரியாவதி என்ற பெண்ணொருவர் கடந்த 27ஆம் திகதி குளிப்பதற்காக தொரவெல ஆற்றிற்கு சென்றிருந்த நிலையில் அன்றைய தினம் மாலை தொரவெல ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார் .
குறித்த பெண் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு, பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் அதன்போது குறித்த பெண் பல சந்தர்ப்பங்களில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகியமை தெரியவந்துள்ளது .
மேலும் , அவரது கழுத்தையும் வாயையும் கட்டிக்கொண்டு துஷ்பிரயோகம் செய்து கொலை செய்ததாகக் சட்ட வைத்திய அதிகாரி மேற்கொண்ட பிரதே பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பொதே சந்தேக நபரான 17 வயதுடைய பாடசாலை மாணவன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பதில் நீதவான் டி.எம் சந்திரசேகரவிடம் ஆஜர்படுத்தப்பட்ட போது , சந்தேக நபரை எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் , அவரின் உடல், உள மற்றும் சமூக நோய்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பித்து டி,என்,ஏ பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டார்.
No comments