Home
/
இலங்கை செய்தி
/
இன்று சிறப்பாக நடைபெற்ற சுவாமி விபுலானந்த அடிகளாரின் 77 ஆவது மகாசமாதி தின நிகழ்வு!!
இன்று சிறப்பாக நடைபெற்ற சுவாமி விபுலானந்த அடிகளாரின் 77 ஆவது மகாசமாதி தின நிகழ்வு!!
( வி.ரி. சகாதேவராஜா)
உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 77 ஆவது மகாசமாதி தின நிகழ்வும், அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழா தின பதாதை திரை நீக்க திறப்பு விழாவும் இன்று வெள்ளிக்கிழமை (19.07.2024) காலை அவர் அவதரித்த காரைதீவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றன.
காரைதீவு விபுலாநந்தர் ஞாபகார்த்தப் பணி மன்றத்தினர் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு இந் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
முன்னதாக காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியிலிருந்து சுவாமிகளின் திருவுருவச் சிலை தாங்கிய மாணவர்களின் ஊர்வலம் கண்ணகை அம்மன் ஆலயம் வரை நடைபெற்றது.
கண்ணகை அம்மன் ஆலய முச்சந்தியில் அடிகளாரின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து பின்னர் துறவற நூற்றாண்டு விழா தின பதாதை திரை நீக்க திறப்பு விழாவும் இடம் பெற்றது.
பிரதம அதிதியான அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன், சிறப்பு அதிதியான காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்ரன் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டு சுபவேளையில் அப் பதாதையை திறந்து வைத்தனர்.
சுவாமிகளின் "வெள்ளை நிற மல்லிகையோ.. " என்ற பாடல் இசைக்க ,அதிதிகளால் சுவாமிகளின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டன.
இது சுவாமி பிறந்த காரைதீவு மண்ணில் நிறுவப்படும் துறவற நூற்றாண்டு விழா முதலாவது பாதையாகும். இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ய.அநிருத்தனனின் வழிகாட்டலில் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
சிலை திறப்பு விழாவின் பின்னர், அங்கிருந்து அதிதிகள் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரமுகர்கள் ஊர்வலமாக சுவாமி விபுலாநந்தர் மணிமண்டபத்தை அடைந்ததும், அங்கு
பணி மன்றத்தின் தலைவர் சோ.சுரநுதன் தலைமையில் 77 ஆவது ஆண்டு மகா சமாதி தின வைபவம் ஆரம்பமாகியது.
சுவாமிகளின் "வெள்ளை நிற மல்லிகையோ.. " என்ற பாடல் இசைக்க ,அதிதிகளால் சுவாமிகளின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டன.அடிகளாரின் இல்லத்தில் விசேட பூஜையும் இடம் பெற்றது.
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ. ஜெகராஜன் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்..
நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக காரைதீவு பிரதேச சபை செயலாளர் அ.சுந்தரகுமார், சம்மாந்துறை வலய உதவி கல்வி பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
சுவாமி விபுலாநந்தர் கற்கை நிலைய மாணவர்களின் கலை நிகழ்வுகள் சிறப்புரைகள், பாராட்டுப் பரிசில்கள் வழங்கும் நிகழ்வுகள் ஆகியவை இடம்பெற்றன .
நிகழ்வின் ஞாபகார்த்தமாக யாழ்ப்பாணம் இணுவில் முருக ஜீவ அறக்கட்டளை நிறுவனத்தின் ஏற்பாட்டில் பதாதை திறந்து வைக்கப்பட்டதுடன்
100 வெள்ளை மல்லிகை செடிகள் அதிதிகளால் நடப்பட்டன.
ஒட்டுமொத்த நிகழ்வையும் ஏற்பாடு செய்த
பணிமன்ற செயலாளர் கு.ஜெயராஜி நன்றி தெரிவித்து உரையாற்றினார். கலாச்சார உத்தியோகத்தர் என்.பிரதாப் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
மேலும்,பாடசாலை அதிபர்கள், நற்பணி மன்ற நிறுவுனர்கள், அறங்காவலர் ஒன்றிய நிர்வாகத்தினர் உள்ளிட்ட பல பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இன்று சிறப்பாக நடைபெற்ற சுவாமி விபுலானந்த அடிகளாரின் 77 ஆவது மகாசமாதி தின நிகழ்வு!!
Reviewed by Thanoshan
on
7/19/2024 05:53:00 PM
Rating: 5
No comments