Vettri

Breaking News

6 மாதங்களில் 27, 755 டெங்கு நோயாளர்கள் பதிவு




 நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதாக, சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அப்பிரிவின் விசேட மருத்துவர் லஹிரு கொடுத்துவக்கு இது தொடர்பில் தெரிவிக்கையில்:காய்ச்சல் 48 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக நீடித்தால் உடனடியாக மருத்துவரை நாடி சிகிச்சை பெறுவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் தரவுகளின்படி இந்த வருடத்தின் முதல் ஆறு மாத காலத்தில் 27, 755 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.இந்நிலையில் டெங்கு நோயினால் 09 மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது நாடளாவிய ரீதியில் 13 மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளில் டெங்கு பரவல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments