Vettri

Breaking News

பொறியினுள் அகப்பட்ட 45 இலங்கை குற்றவாளிகள்!!




இன்டர்போலால் சிவப்பு பட்டியலிடப்பட்ட  45 இலங்கை குற்றவாளிகள் வெளிநாடுகளில் பெரும்பாலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த தகவலை உயர்மட்ட பொலிஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், இவர்கள் இலங்கையில் சட்டவிரோதமான செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் வேளையில் பிடிபடுவதைத் தவிர்ப்பதற்காக ஆரம்பத்தில் டுபாயில் தஞ்சம் புகுந்து அங்கிருந்து தற்போது வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, இந்த நாடுகளுடன் கைச்சாத்திடப்பட்ட நாடு கடத்தல் உடன்படிக்கைகளின் அடிப்படையில் அவர்களை பொறியில் சிக்க வைத்து இங்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதனடிப்படையில், இலங்கை அதிகாரிகள், துபாய் அதிகாரிகளுடன் இணைந்து, சிவப்பு அறிவிப்புகளின் அடிப்படையில் சில இலங்கைக் குற்றவாளிகளை கைது செய்து, பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளதோடு இலங்கையிலும் ஐந்து குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.   

குறிப்பாக, நீதிமன்ற வழக்கில் இருந்து பிணை பெற்று நாட்டை விட்டு வெளியேறிய கஞ்சிபானி இம்ரான் இலங்கையில் குற்றச் செயல்களுக்கு சதித்திட்டம் தீட்டி வருவதாக கூறப்படுகின்றது.

மேலும், “கஞ்சிபானி இம்ரான்”, டுபாயில் பதுங்கியிருக்கும் “லொகு பாட்டி” மற்றும் “கோணக்கோவிலே” சாந்த ஆகிய குற்றவாளிகளின் உதவியுடன் அத்துருகிரியவில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலை நடத்தியதாக அண்மைய விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments