41,960 காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைப்பு!!
முழு உரிமையுள்ள காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் ‘உறுமய’ வேலைத் திட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்டத்தில் அதிகளவு உறுதிகளை வழங்கும் பிரதேச செயலகத்தில் குளங்களைப் புனரமைப்பதற்கு 25 மில்லியன் ரூபா வழங்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
20 லட்சம் காணி உறுதிகளை வழங்கும் ‘உறுமய’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மொனராகலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலகப் பிரிவுகளில் தகுதியான 41,960 பயனாளிகளில், அடையாள ரீதியில் 600 பேருக்கு உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று வெல்லவாயவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.
மொனராகலை மாவட்ட மக்களுக்கு உறுமய காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, பின்னர் மக்கள் மத்தியில் சென்று அவர்களின் தகவல்களை கேட்டறிந்து சுமூகமான உரையாடலில் ஈடுபட்டார்
No comments