கதிர்காமம் காட்டுப்பாதை ஊடாக 31947பேர் பயணம் செய்துள்ளனர் !!
செ.துஜியந்தன்
இம்முறை கதிர்காமம் காட்டுப்பாதை ஊடாக 31947 பேர் பயணம் செய்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கதிர்காமம் கொடியேற்றத் திருவிழா கடந்த 6 ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. எதிர்வரும் 22 ஆம் திகதி தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முருக பக்தர்கள் காட்டுவழிப் பாதை ஊடாக கதிர்காமக் கந்தனை தரிசிக்க பாதயாத்திரை யில் ஈடுபட்டிருந்தனர்.
கடந்த 30 ஆம் திகதி கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் உகந்தை மலை முருகன் ஆலயம் ஊடாக செல்லும் காட்டுவழிப் பாதை திறந்து வைக்கப்பட்டது. இப் பாதையானது கடந்த 11 ஆம் திகதி மூடப்பட்டது. இம் முறை அதிகளவிலான பக்தர்கள் காட்டுப் பாதை ஊடாக பாதயாத்திரை யில் ஈடுபட்டிருந்தனர். காட்டுப்பாதை திறக்கப்பட்ட நாட்களில் இருந்து பாதை மீண்டும் மூடப்பட்ட தினம் வரை இவ் வருடம் மொத்தமாக 31947 பேர் பயணம் செய்துள்ளனர் என வனவிலங்கு பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்
இம்முறையும் காட்டுப்பாதை ஊடாக பயணித்தவர்களுக்கு தொண்டர் அமைப்புக்களினால் குடி நீர் வசதி சேவைகளை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments