விருந்தினர்களுக்கு 2கோடி பெறுமதியான கைக்கடிகாரத்தை பரிசாக வழங்கிய அம்பானி!!
தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் செல்ல மகன் ஆனந்தின் திருமணம் ஜூலை 12ம் திகதி பிரமாண்டமாக நடந்தது. அந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டார்கள்.திருமணத்தன்று ரூ. 54 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரத்தை ஆனந்த் அம்பானி அணிந்திருந்தார்.
இந்நிலையில் சிறப்பு விருந்தினர்கள் சிலருக்கு Audemars Piguet லிமிடட் எடிஷன் கைக்கடிகாரத்தை பரிசாக கொடுத்திருக்கிறார் ஆனந்த் அம்பானி.
அந்த கைக்கடிகாரத்தின் விலை ரூ. 2 கோடி மட்டுமே. விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை அணிந்து சிலர் சேர்ந்து எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
அந்த புகைப்படத்தில் ரூ. 2 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரத்தை அணிந்த 9 கைகள் மட்டும் தான் தெரிகின்றன.
ஆனந்த் அம்பானிக்கு ரொம்ப பிடித்த பாலிவுட் சூபப்ர் ஸ்டார் ஷாருக்கான், நடிகர் ரன்வீர் சிங், போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூர், நடிகர் ஜாவித் ஜாஃப்ரியின் மகன் மீசான், ஜான்வி கபூரின் காதலர் ஷிகர் பஹாரியா, அவரின் சகோதரர் வீர் பஹாரியா உள்ளிட்டோருக்கு அந்த விலை உயர்ந்த வாட்ச் கிடைத்திருக்கிறது.
No comments