Vettri

Breaking News

பல கோடி வசூல் வேட்டையில் கல்கி 2898ஏடி.. லாபம் மட்டுமே இத்தனை கோடியா, செம வேட்டை




கல்கி 2898ஏடி

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நாயகனாக நடிக்க வெளியான படம் கல்கி 2898ஏடி.

இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, திஷா பதானி, அன்னா பென் உட்பட பலர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் கடந்த 27ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் அறிவியல்+புராண கதையை மையமாக கொண்டு உருவானது.

அட்டகாசமான கிராஃபிக்ஸ் மற்றும் மேக்கிங் காட்சிகளில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

பாக்ஸ் ஆபிஸ்

ரூ. 600 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் முதல் நாளில் உலக அளவில் ரூ. 191 கோடி வசூலித்தது.

15 நாட்கள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 1000 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இதுவரை படம் ரூ. 125 கோடி லாபத்தை கொடுத்திருப்பதாக புதிய தகவல் வந்துள்ளது, அதோடு ஷேர் ரூ. 500 கோடியை எட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. 

No comments