Vettri

Breaking News

வரலாறு காணாத 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாதயாத்திரீகர்கள் கானகத்தினுள்!!




 வரலாறு காணாத  25 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாதயாத்திரீகர்கள் கானகத்தினுள். இம்முறை பாதயாத்திரை வரலாறு படைக்கிறது 

( கதிர்காமத்தில் இருந்து வி.ரி.சகாதேவராஜா)

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம்  ஆடி வேல்விழாவை  ஒட்டிய பாதயாத்திரை வரலாறு காணாத வகையில் இம்முறை களைகட்டி உள்ளது.

 இதுவரை 25,000 மேற்பட்ட பாதயாத்திரீகர்கள் கானகத்தினுள் பிரவேசித்து இருக்கின்றார்கள்.

 கடந்த 30ஆம் தேதி முதல் நாள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் கானகப் பாதை திறந்து வைக்கப்பட்டது. அன்றைய தினம் சுமார் 7000 அடியார்கள் கானகத்தில் பிரவேசித்தனர். கடந்த ஆறு நாட்களாக பயணித்து நேற்றும் முன்தினமும் கருகாமத்தை சுமார் 5000 அடியார்கள் வந்தடைந்தனர்.

 நேற்றைய தினம் உகந்தமலை முருகன் ஆலய வருடாந்த ஆலிவில் விழாவை ஒட்டிய கொடியேற்றம் ஆலய பிரதம குரு க.கு. சீதாராம் குருக்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுமார் 9000 அடியார்கள் கானகத்தில் பிரவேசித்துள்ளார்கள்.

 அதேவேளை நேற்று கதிர்காம கந்த ஆலய கொடியேற்றம் பால்குடி பாபா பள்ளிவாசலில் இடம்பெற்றது.

 அவ்வமயம் வடக்கு கிழக்கிலிருந்து சுமார் 10000 அடியார்கள் கொடியேற்றத்தில் கலந்து கொண்டார்கள். எதிர்வரும் 11ஆம் தேதி வரை காட்டுப்பாதை திறந்திருக்கும்.

 செல்வச் சேர்ந்த ஆலயத்தில் இருந்து புறப்பட்ட ஜெயா வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரை குழுவினர் கடந்த 60 நாட்களின் பின்னர் நேற்று முன்தினம் கதிர்காமத்தை அடைந்து கதிர் மலை  ஏறி அவர்களை  அவர்களது நேர்த்தியை பூர்த்தி செய்து இருந்தார்கள்.

 இன்னும் மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை போன்ற பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான யாதத்திரீகர்கள் தற்சமயம் கானகத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள் .

இம்முறை பயணம் அனைவருக்கும் சாதகமாக அமைந்திருந்தது காலநிலை சிறப்பாக இருந்தது.

 எனினும் இரண்டு இடங்களிலே போலீஸ் மற்றும் ராணுவத்தினரின் கணக்கெடுப்பு இடம் பெற்று இருந்தது.








No comments