மட்டக்களப்பில் 1500 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்!!
ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களின் கருத்திட்டத்திக்கு அமைவாக பொருளாதார நலிவு நிலையில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் திறமையுள்ள ஒரு லட்சம் மாணவர்களுக்கும், கல்வி பொது தராதர உயர்தர மாணவர்கள் 6000 பேருக்கும், புலமை பரிசில் வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வானது, இந்து கல்லூரி மைதானத்தில் அரசாங்க அதிபர் திருமதி ஜெஸ்ரினா முரளிதரன் தலைமையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட 1500 மாணவ செல்வங்களுக்கான ஜனாதிபதி புலமை பரிசில்களை வழங்கி வைத்திருந்தோம்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் கௌரவ சதாசிவம் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஏ.எல்.எம் அதாஉல்லா,கௌரவ அலி ஸாஹிர் மௌலானா கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார், உட்பட கல்வித் திணைக்கள உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
No comments