மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்ட 12 பேர் கைது!!
சட்ட விரோதமாக பொகவந்தலாவ பகுதியில் ராணி காடு தோட்ட மற்றும் காசல்ரீ நீர் தேக்கத்திற்க்கு நீர் வழங்கும் மாஎலிய வனப் பகுதியில் மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) காலை பொகவந்தலாவ பொலிஸார் மற்றும் அதிரடி படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுகத் தெரிவித்துள்ளார்
No comments