Vettri

Breaking News

தாந்தாமலை முருகன் ஆலயத்தை நோக்கிய 11 ஆவது புனித யாத்திரை!!




செ.துஜியந்தன்

மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு புனித தலயாத்திரை ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கிழக்கில் வரலாற்று பிரசித்தி பெற்ற தாந்தாமலை முருகன் ஆலயத்தை நோக்கிய 10 ஆவது புனித யாத்திரை 20-07-2024 சனிக்கிழமை   ஆரம்பமாகவுள்ளது இப் புனித யாத்திரையில் அடியார்கள் இணைந்து கொள்ளலாம் என கோட்டைக்கல்லாறு புனித தலயாத்திரை ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தாந்தாமலை முருகன் ஆலய தீர்த்தோற்சவத்தை முன்னிட்டு வருடாந்தம் கோட்டைக்கல்லாறு அம்பாரைவில் பிள்ளையார் , முத்து மாரியம்மன் ஆலய முன்றலில் இருந்து  நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் பாதயாத்திரை மேற்கொள்வது வழக்கமாகும்.   இதற்கமைய இம் முறை 20 ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு பாதயாத்திரை ஆரம்பமாகின்றது. இவ் யாத்திரை 21 ஆம் திகதி காலை தாந்தாமலை முருகன் ஆலயத்தை சென்றடையவுள்ளது.

இவ் யாத்திரையில் இணைந்து கொள்ளும் அடியார்கள் .  ஆண்கள் காவி நிற வேட்டியுடனும், பெண்கள் மஞ்சள் நிற சேலையுடனும் இணைந்துகொள்ளுதல் அவசியமாகும்.  இரு தினங்களும் பாதயாத்திரையில் ஈடுபடும் அடியார்களுக்கு அன்னதானம், தாகசாந்தி போன்றவற்றை வழங்க விரும்புபவர்கள் யாத்திரைக் குழுவினரோடு தொடர்பு கொள்ளலாம். 

குறித்த பாதயாத்திரை குழுவினர் கோட்டைக்கல்லாறு, ஒந்தாச்சிமடம், ஈஸ்டன் தோட்டம், களுவாஞ்சிக்குடி, பட்டிருப்பு சந்தி, பெரியபோரதீவு, கோயில் போரதீவு, புன்னக்குளம், தும்பங்கேணி, நிலக்கோட்டை, 40ஆம் கட்டை, செல்வாபுரம், வாழைக்காலை ஆகிய இடங்கள் ஊடாக 21 ஆம் திகதி தாந்தாமலை முருகன் ஆலயத்தை சென்றடையும். பாதயாத்திரையில் இணைய விரும்பும் அடியார்கள் 0770846712. ,0779898006 ஆகிய இலக்கங்கலோடு தொடர்பு கொள்ளவும்


No comments