Vettri

Breaking News

10வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை!!




 பத்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக மகளின் தந்தை நேற்று (22) இரவு கைது செய்யப்பட்டார்.


பசறை வெல்கொல்ல பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 45 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் நடத்தையில் கடந்த இரண்டு மூன்று தினங்களாக மாற்றங்கள் காணப்பட்டுள்ளன.

மாற்றம் குறித்து சிறுமியின் தாயார் கேட்டபோது, ​​கடந்த 19ஆம் திகதி தாய் வயல் வேலைக்குச் சென்ற போது தந்தையால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமி தனது தாயிடம் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், தாய் பசறை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் படி, சந்தேகநபரான தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்திற்கு முகங்கொடுத்த சிறுமி பசறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வைத்திய பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பசறை நீதவான்நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

No comments