T20 world cup - தென்னாபிரிக்கா அணிக்கான வெற்றி இலக்கு!
2024 டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் தற்போது இடம்பெற்று வரும் இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆரம்ப சுற்றின் முதல் போட்டியில் தென்னாபிரிக்கா அணிக்கு 78 என்ற வெற்றி இலக்கை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 77 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் குசல் மெந்திஸ் 19 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் 16 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
இலங்கை அணி சார்பில் எந்தவொரு வீரரும் 20 ஓட்டங்களை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பந்து வீச்சில் என்ரிச் நோர்ட்ஜே அதிகப்படியாக 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
No comments