லண்டன் OTHM நிறுவன பிரதானி மற்றும் ஸ்ரீலங்கா மெட்டோபொலிடன் கல்லூரி தலைவர் சந்திப்பு..!
லண்டன் Organization for Tourism and Hospitality Management நிறுவன பிரதானி அன்ரிவ் றேனி மற்றும் ஸ்ரீலங்கா மெட்ரோபொலிடன் நிறுவன ஸ்தாபக தலைவர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை (11) கொழும்பு மெட்ரோபொலிடன் கல்லூரியின் இடம்பெற்றது.
மெட்ரோ பொலிடன் கல்லூரி மற்றும் லண்டன் OTHM கல்வி நிறுவனத்திற்கும் இடையிலான 15 வருட உறவினை நியாபகப்படுத்தி நட்பு ரீதயாக இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. இலங்கையில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற மிகச் சிறப்பாக இயங்கிவரும் கல்லூரியின் ஸ்தாப தலைவரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி எனவும் லண்டன் Othm நிறுவன பிரதானி தெரிவித்தார்.
இதன்போது லண்டன் OTHM நிறுவன பிரதானிக்கு மெட்ரோபொலிடன் கல்லூரி தலைவரால் நினைவுச்சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டது.
இலங்கையில் உயர்கல்வி, உயர் பட்டப்படிப்புக்களை வழங்கிவருகின்ற தனியார் கல்வி நிறுவனங்களில் மெட்ரோபொவிடன் கல்லூரி முன்னிலையில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments