Vettri

Breaking News

பொய்யான அறிக்கைகளை வெளியிடுகிறார் மைத்திரி : கத்தோலிக்க திருச்சபை குற்றச்சாட்டு




 உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் (Easter Attack) பாதிக்கப்பட்டவர்களிற்கு பல தரப்பினர் வழங்கிய நிதி உதவி பாதிக்கப்பட்டவர்களை சென்றடையவில்லை என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளதை இலங்கை கத்தோலிக்க திருச்சபை நிராகரித்துள்ளது.

இந்த நிலையில், முன்னாள் அதிபாரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் ஜூட் கிரிஷாந்த (Rev. Fr. Jude Krishantha), “கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் (Cardinal Ranjith) அவர்கள் 500 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை வழங்கியுள்ளார்“ என குறிப்பிட்டுள்ளார்.முன்னாள் அதிபர் தனது அரசியல் வங்குரோத்து நிலையை மறைப்பதற்காகவே ஊடகங்கள் முன் இந்த பொய்யான அறிக்கைகளை வெளியிடுகிறார்.


உண்மையில், கர்தினால் ரஞ்சித்தின் கீழ் பராமரிக்கப்படும் நலன்புரி அமைப்பான ‘சேத் சரண கரித்தாஸ்’ (Seth Sarana Caritas) பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதியை செலவிட்டுள்ளது.

உங்கள் வலது கை செய்வதை உங்கள் இடது கை கூட அறியக்கூடாது, அதனால் நீங்கள் கொடுப்பது இரகசியமாக இருக்கும் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் போதனை உள்ளது. அதனால்தான் கத்தோலிக்க திருச்சபை நாம் செய்யும் காரியங்களை ஊடகங்களில் விளம்பரப்படுத்துவதில்லை.

அதனால்தான் நாம் கொடுக்கும் விடயங்களில் இரகசியம் காக்கின்றோம்”, என ஜூட் கிரிஷாந்த மேலும் குறிப்பிட்டுள்ளார். 

No comments