மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து!!
வரக்காபொல பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த 13 பாடசாலை மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் சிகிச்சைக்காக வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 26 மாணவிகள் மற்றும் 07 பெற்றோர்கள் ரெண்டம்பேவில் உள்ள முகாமுக்குச் சென்று கொண்டிருந்த போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வரக்காபொல நகரில் உள்ள கால்வாயில் கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வரக்காபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments