Vettri

Breaking News

பிரபல கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூர்யாவின் தாயார் காலமானார்!!




 

பிரபல கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூர்யாவின் தாயார் பிரீதா ஜயசூர்யா தனது 80வது வயதில் காலமானார்.

அவர் தனது சொந்த ஊரான மாத்தறையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.

இந்நிலையில், ரி20 உலகக் கிண்ண தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக அமெரிக்கா சென்றுள்ள சனத் ஜயசூர்யா நாடு திரும்பியுள்ளார்.

இந்த கடினமான நேரத்தில் அவர் தனது குடும்பத்துடன் திரும்பியதை இலங்கை கிரிக்கெட் உறுதி செய்துள்ளது. இறுதிச் சடங்குகள் புதன்கிழமை மாத்தறையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பிரீதா ஜயசூர்யா தனது மகனின் புகழ்பெற்ற கிரிக்கெட் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments