பேருந்து நிலையத்தில் அமெரிக்கப் பெண்ணை பாலியல் ரீதியில் தொட்ட நபர் கைது!!
பேருந்து நிலையத்தில் வைத்து 30 வயதுடைய அமெரிக்கப் பெண்ணை பாலியல் ரீதியில் தொட்டார் என்றக் குற்றச்சாட்டில் கைதுசெய்த சந்தேகநபர்) மொனராகலை பொலிஸாரால் புலனாய்வு அதிகாரிகளின் உதவியுடன் கடந்த 06 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
துன்புறுத்தலுக்கு உள்ளான அந்த பெண் பிபில கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தன்னார்வ ஆசிரியையாக பணியாற்றுகிறார்.
மொனராகலை பேருந்து நிலையத்தில் தனது பணியிடத்திற்குச் செல்வதற்காக பேருந்தில் சென்று கொண்டிருந்த போது, பஸ் நடத்துனர் அந்தப் பெண்ணின் உடலை வருடியுள்ளார்.
சந்தேகநபர் 15 கன்வன்வ, கீனகொடபர, பக்கினிகஹவெல பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபராவார்.
சந்தேக நபர் மொனராகலை நீதவான் நீதிமன்றில் வெள்ளிக்கிழமை (07) ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளார்.
No comments