பல்கலைக்கழகங்களுக்கு விசேட பாதுகாப்பு!!
அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் பணிப்புரைக்கு அமைய கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எம்.திலகா ஜயசுந்தர அரச பல்கலைக்கழக அமைப்பின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி கடிதமொன்றை, திங்கட்கிழமை (24) அனுப்பிவைத்துள்ளார்.
No comments