Vettri

Breaking News

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் எழுத்து மூல உறுதிமொழியொன்று வழங்கப்படும்!!




 பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் எழுத்து மூல உறுதிமொழியொன்று வழங்கப்படும் என்றும் அது தொடர்பான பேச்சுவார்த்தையொன்று நேற்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் இடம்பெற்றுள்ளதாகவும் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அதேவேளை, இந்த முறை வரவு, செலவுத் திட்டத்தில் அதற்கான நிதியை ஒதுக்க முடியாதுள்ளதால்அடுத்து வரும் வரவு, செலவு திட்டத்தின் மூலம் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு அடுத்த ஜனவரி முதல் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று காமினி வலேபொட எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

“பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களின் கொடுப்பனவில் 25 வீத அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்கவே தமக்கும் அந்த 25 வீத கொடுப்பனவினை வழங்க வேண்டும் என கல்வி சாரா ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதற்காக புதிதாக நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன் பல்கலைக்கழகங்களின் கையிருப்பிலிருந்து அந்த நிதியை பெற்றுக் கொடுப்பதற்கும் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எவ்வாறெனினும் எத்தகைய கொடுப்பனவுகளை வழங்கினாலும் அதற்கு திறைசேரியின் அனுமதி முக்கியமாகிறது.

இந்த விடயம் தொடர்பில் நான் பல பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதுடன், இரண்டு அமைச்சரவைப் பத்திரங்களையும் சமர்ப்பித்துள்ளேன். ஒரு தரப்பினரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் போது மற்றொரு தரப்பினரால் பிரச்சினை எழுகிறது.

No comments