Vettri

Breaking News

போராட்டத்தால் ஸ்தம்பிதமடைந்தது கல்முனை மாநகரம்!!




 போராட்டத்தால் ஸ்தம்பிதமடைந்தது கல்முனை மாநகரம்!!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரியும், தமது அடிப்படை உரிமைக்காகவும் மக்கள் கடந்த 90 நாட்களாக  அமைதி வழியில் போராடி வருகின்றனர். 


அந்த வகையில் 90 ஆவது நாளாகிய இன்று(24)  கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக மக்கள் குவிந்துள்ளதுடன் கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியையும் முற்றுகையிட்டுள்ளனர். இப்போராட்டத்தில் தமிழ்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் ,செல்வராசா கஜேந்திரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கவிந்திரன் கோடீஸ்வரன்,சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றும் காரைதீவு முன்னாள் பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்,  வடக்கு பிரதேசசெயலக உத்தியோகஸ்தர்கள்,பொதுமக்கள் மற்றும் பொது சமூக அமைப்புகளும் கலந்து கொண்டனர்.  மேலும்  உரிய உயர் அதிகாரிகளும் அரசும் எமக்கு தீர்வை தர வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்

No comments