இலங்கை கிரிக்கட் அணியின் தலைமை பயிற்சியாளர் இராஜினாமா!!
இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கிறிஸ் சில்வர்வூட், அந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ் சில்வர்வுட் தனிப்பட்ட காரணங்களுக்காக இராஜினாமா செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு கிறிஸ் சில்வர்வுட் மீதும் குற்றம் சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது
No comments