அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக சிவஞானம் ஜெகராஜன் நியமிப்பு!!
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுச்சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைவாக பொது நிர்வாக அமைச்சினால் இந் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மேலதிக அரசாங்க அதிபராக இருந்த வேதநாயகம் ஜெகதீசன் பதவி உயர்வு பெற்று போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சுக்கு செல்கின்ற காரணத்தினால் இந் நியமனம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது .
2007 இல் இலங்கை நிருவாகசேவையில் இணைந்து கொண்ட காரைதீவைச் சேர்ந்த சிவ.ஜெகராஜன்,
காரைதீவு பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராகவும், பிரதேச செயலாளராகவும் கடமையாற்றி தொடர்ந்து கல்முனைவடக்கு பிரதேச செயலாளராகவும் ,திருக்கோவில் பிரதேச செயலாளராகவும் பணியாற்றி 2019 மீண்டும் காரைதீவுக்கு பிரதேச செயலாளராக சேவையை பூர்த்தி செய்து தற்பொழுது அவர் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
எனவே, புதிதாக காரைதீவு பிரதேச செயலாளராக திருமதி சஜிந்ரன் இராகுலநாயகி நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments