Vettri

Breaking News

கண்ணகி புரத்தில் இலவச கல்வி நிலையம் திறந்து வைப்பு!!











மக்கள் நலன் காப்பகம் அம்பாறை மாவட்ட அமைப்பின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு இணைப்பாளர் திரு.ச.சுதாகரன் அவர்களின் தலைமையில் அம்பாறை மாவட்ட ஆலையடி வேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம் கிராமத்தில் மக்கள் நலன் காப்பகம் அம்பாறை மாவட்டம் அமைப்பின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு அவர்களின்  அக்கிராம மாணவர்களின் நலன் கருதி பகுதி நேர கல்வி நிலையம் திறந்து வைக்கப்பட்டது....


இதற்கான நிதி அனுசரனை LOVE N CARE.UK. PWA-UK வழங்கி வைத்தனர் இன் நிகழ்வில் கண்ணகிபுரம் கிராம பாடசாலை மாணவர்களுக்கு கற்றஉபகரணங்களும் இவ் நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டது..


மேலும் இவ் நிகழ்வில் விசேட அதிதிகளாக ஆலையடி வேம்பு பிரதேச சபையின் செயலாளர் திருவாளர். R.சுரேஸ்ராம்  மற்றும் திரு.த.இராசநாதன் கமு/திகோ/கண்ணகி வித்தியாலய அதிபர் ஆகியோர் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக திரு.கந்தசாமி இயக்குனர் தாயக மக்கள் நலன் காப்பகம்  மற்றும் திரு.ஜெயராஜ் நிர்வாகப்பணிப்பாளர் தாயக மக்கள் நலன் காப்பகம் மற்றும் பொருளாதார உத்தியோதர் மதகுரு மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்கள்  மற்றும்  மக்கள் நலன் காப்பகத்தின் ஏனைய மாவட்டகளின் இணைப்பாளர்கள் என பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது....

No comments