மார்க்ஸ்மேன் விளையாட்டுக் கழகத்தின் புதிய ஜேர்சி அறிமுக நிகழ்வு ; பிரதம அதிதியாக சிராஸ் மீராசாஹிப்..!
மார்க்ஸ்மேன் விளையாட்டுக் கழகத்தின் புதிய ஜேர்சி அறிமுக நிகழ்வு ; பிரதம அதிதியாக சிராஸ் மீராசாஹிப்..!
(எஸ். சினீஸ் கான்)
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட மார்க்ஸ்மேன் விளையாட்டுக் கழகத்தின் 2024ம் ஆண்டுக்கான மேலங்கி அறிமுக நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
விளையாட்டுக் கழகத்தின் தலைவர் றிஷாட் ஏ காதர் தலைமையில் அட்டாளைச்சேனை ஹனீபா ஹாஜியார் விடுதியில் இடம்பெற்ற இன் நிகழ்வுக்கு கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும், மெட்ரோ பொலிட்டன் கல்லூரியின் தவிசாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹீப் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கடந்த காலங்களில் இப்பிராந்தியத்தில் விளையாட்டு கழகங்களின் வளர்ச்சியில் பல்வேறுபட்ட ஆலோசனைகளை வழங்கிய ஓய்வு பெற்ற மாவட்ட மெய்வ வல்லுநர் பயிற்றுவிப்பாளர் எஸ். எல். தாஜுதீனின் சேவையினை பாராட்டியும், பிரதம அதிதி
அம்பாரை மாவட்டத்தில் விளையாட்டு கழகங்களுக்கு ஆற்றிவரும் பங்களிப்புக்காகவும், சமூக சேவைக்காவும் கழகத்தின் சார்பில் பொன்னாடை போத்தி நினைவுச்சின்னம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.
No comments