கொலன்னாவ நகரம் வேறு இடத்திற்கு மாற்றப்படும்!
கொலன்னாவ நகரை அமைந்துள்ள இடத்திலிருந்து அதே பகுதியில் உள்ள உயரமான இடத்திற்கு மாற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். தற்போது தாழ்வான பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள், பாடசாலைகள், வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் புதிய நகரத் திட்டத்தின் கீழ் உயரமான நிலங்களில் அமைக்கப்படும்.
அதே பகுதியில் பொருத்தமான காணிகள் உள்ளதோடு, கொலன்னாவையின் புதிய நகரத் திட்டத்தின் பிரகாரம் அனுமதியற்ற நிர்மாணங்களைத் தடுக்கும் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
இத்திட்டத்தின்படி களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் வெள்ளக் கட்டுப்பாட்டு அமைப்பு தயாரிக்கப்படும்.
இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி சாகல ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர மற்றும் பிரேம்நாத் சி.தொலவத்த ஆகியோரும் கலந்துகொண்டனர்.
No comments