Vettri

Breaking News

இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்!




 இந்திய வெளிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(20) நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது இந்திய வௌிவிவகார அமைச்சர், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வௌிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இதன்போது வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடனான சந்திப்பொன்றும் நடைபெறவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, இந்திய வௌிவிவகார அமைச்சர் இன்று(20) மாலை தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளதாக பிரதான தமிழ் கட்சிகள் தெரிவித்துள்ளன.

கலாநிதி எஸ்.ஜெய்சங்கருடன் இந்திய வௌிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் சிலரும் நாட்டிற்கு வருகை தரவுள்ளனர்.

No comments