Vettri

Breaking News

காதல் திருமணம் செய்தால் ‘குற்ற வரி’




 

காதல் திருமணம் செய்தவர்கள் ‘குற்ற வரி’ செலுத்தாவிட்டால் ஊரை விட்டு ஒதுக்கும் நடைமுறை தமிழ்நாட்டு கிராமத்தில் உள்ளது. இதுதொடர்பில் பிபிசி தமிழ் கள ஆய்வை மேற்கொண்டு செய்தி வெளியிட்டுள்ளது.  

கோவை மாவட்டம் அருகே, காதல் திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு குற்றம் செய்ததற்கான ‘வரி’ விதிக்கப்படுவதுடன், அதைச் செலுத்தாவிட்டால் ஊரை விட்டுத் தள்ளி வைக்கும் முறை இன்னமும் நடைமுறையில் உள்ளது. இதைக் 'குத்தவரி' என்று அவர்கள் அழைக்கிறார்கள்.

இந்த நடைமுறை பல தலைமுறைகளாகப் பின்பற்றப்படும் நடைமுறை என்று வடக்கலூர் கிராமத் தலைவர் பேசியபோது கூறினார்.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே, காதல் திருமணம் செய்வோரை கிராமத்தில் இருக்கும் சாதிய தலைவர்கள் ஒதுக்கி வைப்பதாக புகார்கள் கூறப்படுகின்றன. அதுமட்டுமின்றி, காதல் திருமணம் செய்த தம்பதிகளுக்கு ‘குத்தவரி’ (குற்றம் செய்ததற்கான வரி) செலுத்தினால் ஊரினுள் சேர்த்துக் கொள்ளும் வினோத நடைமுறை இருப்பதாகவும் புகார் எழுந்தது.

அன்னூரில் இருந்து 5 கி.மீ. தொலைவு பயணித்து வடக்கலூர் கிராமத்தை அடைந்தோம். சுற்றிலும் வாழைத் தோட்டங்கள், இதர வகை பயிர் சாகுபடி எனப் பசுமை சூழ்ந்த கிராமமாக இருந்தது.

சுமார் 220 வீடுகளைக் கொண்ட இக்கிராமத்தில் 95 சதவீதம் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்கள்தான் வசித்து வருகின்றனர். ஊரினுள் இந்தச் சாதியைச் சேர்ந்த தலைவர்கள் நிர்வகிக்கும், கருப்பராயன் கோவில் உள்ளது.

ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படும் காதல் திருமண ஜோடிகள், இந்தக் கோவிலுக்குள் நுழையக்கூடாது என சாதிய தலைவர்கள் மிரட்டுவதாக பாதிக்கப்பட்டோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

No comments