கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய திருவிழா!!
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் 190ஆவது வருட விழா நேற்று (13) கொண்டாடப்பட்டது. நேற்று காலை விசேட திருப்பலி ஆராதனை ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் மாலை புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவணி இடம்பெறவுள்ளது.
கடந்த 3ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா கொண்டாட்டம் ஆரம்பமானது. அன்று முதல் நவநாள் ஆராதனைகள் நாள்தோறும் இடம்பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (12) இரவு 7.00 மணிக்கு விசேட வெஸ்பரஸ் ஆராதனைகள் இடம்பெற்றன. கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய மெல்கம் ரன்ஜித் கருதினால் ஆண்டகை தலைமையில் வெஸ்பரஸ் ஆராதனைகள் இடம்பெற்றன.
கொழும்பு உதவி ஆயர் வணக்கத்திற்குரிய ஜே.டி.என்டனி ஆண்டகை தலைமையில் நேற்று நண்பகல் 12.00 மணிக்கு திருவிழா ஆராதனையொன்று ஆங்கில மொழியில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் மாலை 5.30க்கு புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவணி ஆரம்பமாகியது.
பவணி மீண்டும் ஆலயத்தை வந்தடைந்ததன் பின்னர் இறுதி ஆசீர்வாத ஆராதனை . கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய மெல்கம் ரன்ஜித் கருதினால் ஆண்டகையினால் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை திருவிழாவை முன்னிட்டு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தை அண்மித்த பகுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை குறித்த பகுதிக்கான வாகன போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments