Vettri

Breaking News

பெண் பொலிஸ் அதிகாரியின் தாய்மை - இலங்கை முழுவதும் குவியும் வாழ்த்துக்கள்




 முல்லைத்தீவில் தந்தையால் கொடூரமாக தாக்கப்பட்ட பெண் பிள்ளையை பராமரிக்கும் பொலிஸ் அதிகாரி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.

வெலிஓயா, கல்யாணபுர பிரதேசத்தில் குழந்தையை கொடூரமான முறையில் தந்தை தாக்கிய தொடர்பில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தையுடன் தாக்குதலுக்கு துணை புரிந்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்`

இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான சிறுமி பொலிஸாரின் பாராமரிப்பில் எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறார்.

பெண் பொலிஸ் அதிகாரியின் தாய்மை - இலங்கை முழுவதும் குவியும் வாழ்த்துக்கள் | Lady Police Officer Humble Behaviour Sri Lanka

வெலிஓயா பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியக உத்தியோகத்தர்களின் கட்டுப்பாட்டில் உள்ள 04 வயது 06 மாத வயதுடைய சிறுமி வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் வெலிஓயா பொலிஸ் அதிகாரிகளின் மேற்பார்வையில் முல்லைத்தீவு பொது வைத்தியசாலைக்கு சிறுமி கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

தந்தையால் கொடூரமாக தாக்கப்பட்டு பல அழுத்தங்களுக்கு முகங்கொடுத்த சிறுமியை, பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் மிகவும் பாசமாகவும் அன்பாகவும் கவனித்துக் கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகின்றன.

பெண் பொலிஸ் அதிகாரியின் தாய்மை - இலங்கை முழுவதும் குவியும் வாழ்த்துக்கள் | Lady Police Officer Humble Behaviour Sri Lanka

பொலிஸ் சீருடை அணிந்த பெண்ணுக்குள் மலர்ந்த தாய்மை என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் பெற்றோரை விட பல மடங்கு அன்பாக கவனித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்


Gallery

No comments