தனது பாடசாலை ஆசிரியையின் தலையை, நிர்வாண புகைப்படங்களில் பொருத்தி பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைகளில் பகிர்ந்த மாணவன்
பாடசாலை ஆசிரியை ஒருவரின் புகைப்படத்துக்கு நிர்வாண உருவத்தை பதித்ததாக கூறப்படும் அதே பாடசாலை மாணவன் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.
இந்த உத்தரவு, குளியாபிட்டிய நீதவான் ரந்திக லக்மால் ஜயலத்தினால் செவ்வாய்க்கிழமை (11) பிறப்பிக்கப்பட்டது.
மேலும், இந்த வழக்கை ஓகஸ்ட் 28-ம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்கவும் உத்தரவிட்டார்.
மேலும், பிணை நிபந்தனைகளை பிறப்பித்த நீதவான், விசாரணையில் தலையிட வேண்டாம் என்றும், திருத்தப்பட்ட புகைப்படங்களில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்றும் சந்தேக நபரை எச்சரித்தார், மேலும் அவர் அந்த நிபந்தனைகளுக்கு இணங்காவிட்டால், பிணை ரத்து செய்யப்பட்டு, வழக்கு விசாரணை நிறைவடையும் வரையிலும் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் எச்சரித்தார்.
சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய குளியாபிட்டிய பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகேஷ் குமாரசிங்க, இந்த சம்பவத்தினால் குறித்த ஆசிரியை மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்தார்.
No comments