Vettri

Breaking News

விவசாயிகளுக்கு உரத்தை இலவசமாக வழங்க நடவடிக்கை!!




 நெற்செய்கை விவசாயிகளுக்கு எதிர்வரும் இரண்டு போகங்களுக்காக எம். ஓ. பி. உரத்தை இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு   இணங்க உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் மூலம் 55,000 மெற்றிக்தொன் எம். ஓ. பி. உரம் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளார். அதேவேளை, நாட்டில் தற்போது உரத்திற்கு எந்தவித தட்டுப்பாடும் கிடையாது என்றும் யூரியா மற்றும் எம். ஓ. பி. உரங்கள் போதியளவு கையிருப்பில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments