நாட்டில் குற்றச் செயல்களை ஒடுக்க மக்களின் ஆதரவு தொடர்ந்தும் தேவை - பொலிஸ் மாஅதிபர் தெரிவிப்பு!!
நாட்டில் குற்றச் செயல்கள், போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் கும்பல்களை ஒடுக்குவதற்கு மக்களின் ஆதரவு தொடர்ந்து பொலிஸாருக்கு தேவை என்றும், பொலிஸாரை நம்பிய சமூகம் பாதுகாக்கப்படுமெனவும் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
“சுவசர கெதெல்ல” சமூகத்தை கட்டியெழுப்பும் புனர்வாழ்வு மற்றும் சிகிச்சை நிலையக் குழுவின் களனிப் பிரதேச மத்திய நிலையத் திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் மேற்கண்டவாறு தெரிவித்தார். சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் பற்றி அவர் பேசும்போது, தந்தையென அடையாளம் காணப்பட்ட நபர் ஒருவர், தனது குழந்தையை மனிதாபிமானமற்ற முறையில் தாக்குவதனைக் காண்பிக்கும் காணொளி பரவியது. அந்நபரை சட்டத்தின் முன்னிறுத்துமாறு அனைத்துத் தரப்பினரும் பல்வேறு சமூக அமைப்புகளும் கோரிக்கை விடுத்தன. இந்நிலையிலேயே சந்தேக நார் கைது செய்யப்பட்டார். மிக விரைவில் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும்.
No comments