நாளையும் சுகயீன போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர் - இலங்கை ஆசிரியர் சங்கம்!!
அதிபர்கள், ஆசிரியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ரணில்- ராஜபக்ஷ அரசாங்கத்தின் அடக்குமுறையைக் கண்டித்து அதிபர், ஆசிரியர்கள், வியாழக்கிழமையும் (27) சுகயீன போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் ஆ.தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.
அதிபர், ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டிய சம்பள முரண்பாட்டுக்கு தீர்வை வழங்காது, தமக்கு கிடைக்கவேண்டியதை கேட்கும் அதிபர், ஆசிரியர்களின் ஜனநாயகரீதியான போராட்டத்தை நசுக்க, நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி, அதிபர், ஆசிரியர்கள் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களை கண்டித்தே நாளையதினம் (27) போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்றார்.
அதிபர்கள், ஆசிரியர்கள் மீதான அடக்குமுறைகளைக் கண்டிக்கும் விதமாக இன்றைய தினமும் ஆதரவு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்
No comments