இராம கிருஷ்ணா கல்லூரியில் இடம்பெற்ற தமிழ் மொழித்தின இறுதி நிகழ்வுகள்!!
இராம கிருஷ்ணா கல்லூரியில் இடம்பெற்ற ஆலையடிவேம்பு கோட்டத்தின் தமிழ் மொழித்தின இறுதி நிகழ்வுகள்...
இன்றைய தினம் (24) காலை 8 மணியளவில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் முன் வாசலில் இருந்து அதிதிகள் மலர்மாலை அணிவித்து கலாசார நிகழ்வுகளுடன் வரவேற்கப்பட்டனர்.
முதலாம் கட்ட நிகழ்வானது ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப்பணிப்பாளர் க.கமலமோகனதாசன் தலைமையில் 16 பாடசாலை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்புடன் கோலாகலமாக இன்று ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது.
மேலும் இன் நிகழ்வில் அக்கறைப்பற்று ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரியின் அதிபர், பிரதி அதிபர்கள், ஆலையடிவேம்பு கோட்ட பாடசாலைகளின் அதிபர்களும், திருக்கோவில் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர்களும், ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் அகில இலங்கை தமிழ் தின போட்டி திருக்கோவில் கல்வி வலயத்தில் ஆலையாடி வேம்பு கோட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு இடையில் இடம்பெற்ற தமிழ்த் தின போட்டி முதலாம் கட்ட நிகழ்வான எழுத்தாக்க போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதல்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments